வியட்நாமை தலைமையாக கொண்டு உலகம் முழுவதும் பல விமானங்களை வியட்ஜெட் (Vietjet) நிறுவனம் இயக்கி வருகிறது. ஆண்டின் 7வது மாதம் 7ம் தேதியை (7/7) சிறப்பிக்கும் விதமாக சிறப்பு ஆஃபர் ஒன்றை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி வியட்ஜெட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்திலும் 7ம் தேதி முதல் 7 நாட்களுக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு டிக்கெட் விலை ரூ.26 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.