பிரான்ஸின் தற்போதை அதிபராக இம்மானுவேல் மேக்ரான் இருக்கிறார். இந்நிலையில் அந்த நாட்டுக்கு வரும் ஏப்ரல் மாதம் மீண்டும் தேர்தல் நடக்க உள்ளது. ஏப்ரல் 10 மற்றும் 24 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்க உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக மேக்ரான் மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார். மக்களின் மேல் உள்ள நம்பிக்கையால் இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.