கொரொனா பரவாமல் சாப்பிடுவது எப்படி? சீன பெண்ணின் புகைப்படம் வைரல்

திங்கள், 7 நவம்பர் 2022 (22:30 IST)
சீனா நாட்டில் ஒரு ரயில் பயணித்த பெண் பயணி வித்தியாசமான முறையில் வாழைப்பழம் சாப்பிடும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கொரொனா பரவியது. இந்தக் கொரொனா தொற்றுப் பரவல் பல வகை உருமாறுதல் அடைந்து மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், இதைத் தடுக்க அரசு பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரொனா பரவல் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கொரொனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ரயிலில் பயணிக்கும்போது, பொது இடங்களில் மக்கள் எந்தப உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.


ALSO READ: விண்வெளியில் ''தியான்ஹே ஆய்வுக் கூடம் ''நிறுவ சீனா முனைப்பு!

இந்த நிலையில்,  ரயிலில் பயணித்த ஒரு பெண் பயணிம் தன்னைச் சுற்றிலும் ஒரு மைக்கா காகிதத்தைப் போர்த்திக்கொண்டு, அதற்குள் இருந்தபடிக் வாழைப்பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்