கொரோனா என்ற வார்த்தைதான் இன்று உலக நாடுகளை பயத்தில் உறைய வைத்துள்ள வார்த்தை. சீனாவில் கொரோனா வைரஸ் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் உலக நாடுகள் பலவற்றிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் பல நாடுகள் தங்கள் நாட்டில் வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவரையில் இந்நோய் பாதிப்பால் 259 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பற்றிய பயம் உலகநாடுகளிலும் அதிகரித்துள்ளது.
இந்த வைரஸ்களோடு வரும் ஃபைல்கள் நம்முடைய சாதனங்களில் உள்ள டேட்டாக்களை அழிக்க, மாற்றியமைக்க அல்லது பிரதி (xerox) எடுக்கும் திறன் கொண்டவை. இது மாதிரியான வைரஸ் சம்மந்தமான பைல்களைக் கண்டுபிடிக்க அவற்றின் எக்ஸ்டென்ஷன் .exe அல்லது .lnk என்று குறிப்பிடப்பட்டுள்ளதா எனப் பார்க்கவேண்டும். அப்படி இருந்தால் அவற்றை டவுன்லோட் செய்வதைத் தவிர்த்துவிடலாம் என வல்லுனர்கள் சொல்லியுள்ளனர்.