ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அழிக்கப்படவில்லை- ட்ரம்ப்புக்கு இங்கிலாந்து பதில்

வெள்ளி, 21 டிசம்பர் 2018 (10:10 IST)
சிரியாவில் ஐ,எஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அனுப்பப்பட்ட அமெரிக்க ராணுவம் விரைவில் நாடு திரும்ப இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புத் தலைதூக்க தொடங்கியது. மெல்ல மெல்ல அதிகமான அவர்களின் ஆதிக்கம் ஒரு கட்டத்தில் சிரியாவின் ஒரு சிலப் பகுதிகளைக் கைப்பற்றி அங்கு இணை அரசங்கம் நடத்துமளவுக்கு முன்னேறினர். அங்குள்ள மக்கள் மீது சர்வாதிகார ஆட்சியை நடத்துகின்றனர்.

இந்த தீவிரவாதிகளை அழித்து ஒழிக்க சிரிய அதிபர் ஆஸாத்துக்கு ஆதரவாக இங்கிலாந்து ராணுவமும் மற்றும் உள்நாட்டுப் போராளிக் குழுவான குர்துப் போராளிகளோடு இணைந்து அமெரிக்க ராணுவமும் சிரியாவில் சண்டைக்கு அனுப்பப்பட்டன. சில ஆண்டுகளாக அங்கு தீவிரவாதிகளோடு இவர்களுக்கும் சண்டை நடந்து வந்தது. இதையடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீட்கப்பட்டன.
இந்நிலையில் அங்குள்ள தீவிரவாதிகளை முழுமையாக அழித்து விட்டதாகவும் அதனால் அங்குள்ள அமெரிக்கப் படைகள் விரைவில் அமெரிக்காவுக்கு திரும்ப இருக்கிறார்கள் என அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டரில் தெரிவித்தார்.


இதற்குப் பதிலளித்துள்ள இங்கிலாந்து செய்தி தொடர்பாளார் ‘ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான உலக நாடுகளின் எதிர்வினைகள் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளன. தீவிரவாதிகளின் ஆதிக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. எனினும் சிரியாவின் கிழக்குப் பகுதிகளை சமீப நாட்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தங்கள் வசம் கொண்டு வந்துள்ளன. எனவே சிரியாவில் நாம் இன்னும் செய்து முடிப்பதற்கு வேலைகள் இருக்கின்றன. அதனால் அவர்களின் மிரட்டலுக்கு பயப்பட வேண்டாம்.  நாம் தொடர்ந்து ஒன்றாக ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

சிரியாவில் சண்டையில் ஈடுபட்ட இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளும் இருவேறு கருத்துகளைக் கூறியிருப்பதால் சிரியா குறித்தும் தீவிரவாதிகள் குறித்தும் குழப்பம் உருவாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்