இஸ்ரேல் மற்றும் காசாவில் போர் நடந்து வரும் நிலையில் அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். மருத்துவ வசதி கூட கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில் எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.