டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க இருப்பதாக சமீபத்தில் எலான் மஸ்க் அறிவித்திருந்தார். ஆனால் அதே நேரத்தில் டுவிட்டர் இணையதளத்தில் ஏராளமான போலி கணக்குகள் இருப்பதாகவும் அந்த போலி கணக்குகள் குறித்த எண்ணிக்கையை அறிவித்தால் மட்டுமே ஒப்பந்தத்தை செயல்படுத்தப் போவதாக தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி எலான்மஸ்க், திடீரென டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் டுவிட்டரின் பங்குகள் 7 சதவீதம் சரிந்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஒப்பந்தத்தின்படி செயல்படாத்தால் எலான் மஸ்க் மீது வழக்குத் தொடரப்படும் என டுவிட்டர் நிர்வாகம் அறிவித்தன்படி,. அதனால், அமெரிக்காவில் உள்ள டெலவர் கோர்ட்டில் எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிர்வாகம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.