உக்ரைனில் லெனின் சிலை உடைப்பு: ஐரோப்பிய யூனியன் ஆதரவாளர்களின் வெறிச் செயல்

செவ்வாய், 30 செப்டம்பர் 2014 (14:15 IST)
கிழக்கு உக்ரைனைச் சேர்ந்த கார்கேவ் நகரின் மையத்தில் அமைந்துள்ள லெனின் சிலையை ஐரோப்பிய யூனியன் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
 
உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதற்காக ஏகாதிபத்திய சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்து வந்த கிரிமியா மக்கன், பொது வாக்கெடுப்பு நடத்தி, 97 சதவிகித மக்களின் ஆதரவுடன் ரஷ்யாவுடன் கடந்த மார்ச் மாதம் இணைந்தது. 
 
இதைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைன் மக்களும் ரஷ்யாவுடன் இணைய விரும்பி தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் அரசு பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
 
இந்நிலையில், அம்மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும் ஐரேப்பிய யூனியனுடன் உக்ரைனை இணைப்பதற்கு ஆதரவாகவும் சிலர் வெறிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அவர்கள், கிழக்கு உக்ரைனைச் சேர்ந்த் கார்கேவ் நகரின் மையத்தில் பிரமான்டமாக அமைந்துள்ள லெனின் சிலையை சேதப்படுத்தினர். சர்வதேச மக்களின் தலைவராக லெனின் திகழ்வதாகக் கூறி, ஐரேப்பிய ஆதரவாளர்களின் இந்த வெறிச் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்