அமெரிக்க அதிபர் டிரம்ப் சம்பளம் யாருக்கு போகிறது? புதிய தகவல்

புதன், 15 மார்ச் 2017 (05:18 IST)
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின்போது தனக்கு அதிபர் சம்பளம் வேண்டாம் என்றும் ஒரு டாலர் மட்டுமே சம்பளமாக பெற்று கொண்டு மீதியை நன்கொடையாக தந்துவிடுவேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது அந்த வாக்குறுதியை செயல்படுத்த தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.



 


அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஆண்டுக்கு $4 லட்சம் சம்பளம் வரும். இந்த சம்பளத்தை அப்படியே தொண்டு நிறுவனத்திற்கு அல்லது அறக்கட்டளைக்கு அளிக்க அவர் முடிவு செய்துள்ளார். தன்னை அடிக்கடி விமர்சனம் செய்து வரும் ஊடகங்கள் இந்த விஷயத்தை விமர்சனம் செய்யாமல் தனக்கு சரியான தொண்டு நிறுவனங்களை அடையாளம் காண்பிக்குமாறு அதிபர் கேட்டுக்கொண்டுள்ளதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் செய்திக்குறிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் முன்னாள் அமெரிக்க அதிபர்களான  ஜான் எஃப் கென்னடி, ஹெர்பர்ட் ஹூவர் போன்றோர் அதிபர் பதவிக்கான சம்பளத்தை தானம் செய்த நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்