தீவிரவாதி என அமைச்சரை சுட்டுக்கொன்ற வீரர்கள்

வியாழன், 4 மே 2017 (20:23 IST)
சோமாலியா நாட்டில் தீவிரவாதி என நினைத்து அமைச்சரை அந்நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.


 

 
சோமாலியா நாட்டில் தீவிரவாதிகள் மற்றும் போராளிகள் அடிக்கடி அரசுக்கு எதிராக தாக்குதலில் ஈடுப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தற்கொலை படை தாக்குதல் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்நிலையில் பொதுப்பணி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் என்பவர் நேற்று ஜனதிபதியை சந்திக்க சென்றுள்ளார்.
 
அப்போது தற்கொலை படை வருகிறது என எண்ணி தவறுதலாக சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் அமைச்சர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதற்கு பிறகுதான் அவர் அமைச்சர் என்பது பாதுகாப்பு படை வீரர்களுக்கு தெரியவந்துள்ளது. 
 
இத்தகவல் அறிந்த ஜனாதிபதி இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த நவம்பர் நடைப்பெற்ற தேர்தலில் இவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்