அமெரிக்க தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக செயல்படும் வகையில் பிரிட்டனைச் சேர்ந்த, 'கேம்பிரிட்ஜ் அனாலிடிகா' நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டதில், 'பேஸ்புக்' டேட்டாக்கள் திருடப்பட்டதாக வெளிவந்த தகவலை அடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 7% விழ்ச்சி அடைந்தது. இதனையடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க்கின் சொத்துமதிப்பு பல ஆயிரம் கோடி குறைந்துவிட்டது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், கேம்பிர்ட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அலெக்சாண்டர் நிக்ஸை சமீபத்தில் சந்தித்து வரும் 2019-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக பாஜக தனது சந்தேகத்தை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனர், மார்க் ஜூக்கர்பெர்க் தன், 'பேஸ்புக்' பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஃபேஸ்புக் தகவல்கள் திருடப்பட்டது உண்மையென்றும், இதற்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், இனி எந்த ஒரு நிறுவனத்துடனும் இணைந்து பேஸ்புக் செயல்படாது என்றும். எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.