கொரோனா வைரஸ் தோன்றியது எப்படி? WHO விசாரணைக்கு சீனா கண்டனம்!

வெள்ளி, 23 ஜூலை 2021 (07:42 IST)
கொரோனா வைரஸ் முதல் முதலில் தோன்றியது எப்படி? என்பதை கண்டறிய உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ள நிலையில் இந்த முடிவுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் கண்டனத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் தோன்றியது எப்படி என்பது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் புதிய விசாரணை விரைவில் தொடங்க உள்ளது. இந்த விசாரணைக்கு சீனா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது அடுத்து சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது
 
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியபோது சீனாவின் மறுப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும் பொறுப்பற்ற, ஆபத்தான நிலைப்பாட்டை சீனா எடுத்திருப்பதாகவும் கூறினார் 
 
சீனாவிடம் கொரோனா தொடர்பான ஆவணங்களையும் ஆய்வுக்கூடத்தில் மாதிரிகளையும் உலகநாடுகள் கேட்டு வலியுறுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த விசாரணை நடந்தால்தான் இன்னொரு பேரிடர் வருவதை தடுக்க முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பின் முடிவு சரியானது என்றும் அவர் தெரிவித்தார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்