ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தாலிபான்கள் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம், ஆப்கன் நாட்டை தாலிபான்கள் ஆக்கிரமித்து தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில் அந்நாட்டில் இருந்து ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர்.
இதனால் காபூல் விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டிருப்பதை அடுத்து, அமெரிக்க ராணுவ வீரர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது,
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தும் வரை அமெரிக்க ராணுவத்தை காபூல் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது 5,200 அமெரிக்க வீரர்கள் அங்கு உள்ளனர் என தெரிவித்தார்.
மேலும், ஒரு நாளில் 9,000 பேர் வரை வெளியேற்ற போதுமான விமானங்கள் கைவசம் இருப்பதாகவும் கடந்த 14 ஆம் தேதி முதல் இதுவரை 7,000 பேரை விமானம் மூலம் வெளியேற்றிருப்பதாகவும் அவர் தகவல் தெரிவித்தார்.