இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் இது குறித்த புதிய சட்டம் இயற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி வேலை நேரத்திற்கு பின்னர் முதலாளியிடம் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமை தொழிலாளருக்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டம் இன்னும் ஒரு வாரத்தில் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. வேலையின் போது பயன்படுத்தும் மொபைலை பணி நேரம் முடிந்ததும் சுவிட்ச் ஆப் செய்து கொள்ளும் சட்டம் ஏற்கனவே பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.