அவர் பிடிக்க போனதோ மீனை.. ஆனால் பிடித்ததோ..!? – அதிர்ச்சி வீடியோ

புதன், 28 ஆகஸ்ட் 2019 (16:28 IST)
பொழுதுபோக்குக்காக மீன்பிடிக்க செல்பவர்கள் பல்வேறு அனுபவங்களை பெறுகிறார்கள். ஒரு அமெரிக்கர் மீன்பிடிக்க சென்றிருக்கிறார் அனால அவருக்கு நடந்த அனுபவமே வேறு!

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பகுதியை சேர்ந்தவர் சேஸ் மெக்ரே. சில நாட்களுக்கு முன்பு விடுமுறையை கழிக்க லங்ஹாம் நீரோடை பகுதிக்கு சென்றிருக்கிறார். பொழுதுபோக்குவதற்காக மீன் பிடிக்க திட்டமிட்டவர் தூண்டிலை போட்டுவிட்டு மீனுக்காக காத்திருக்கிறார்.

தூண்டிலில் ஏதோ சிக்கி கொண்டதை உணர்ந்த அவர் அதை வேகமாக வெளியே எடுத்திருக்கிறார். தூண்டிலை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். பெரிய மீன் ஒன்று சிக்கியிருந்தது. தூண்டிலில் அல்ல ஒரு பாம்பின் வாயில்! அந்த பாம்புதான் தூண்டிலில் சிக்கியிருந்தது.

தூண்டிலில் சிக்கியபிறகும் அந்த பாம்பு கவ்விய மீனை விடாமல் கவ்விக்கொண்டிருந்தது. இதை தனது மொபைலில் படம் பிடித்த மெக்ரே சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

The things I go through with bayou fishing

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்