ஏலியன்ஸ் உண்மையே: ஆதாரங்களுடன் அமெரிக்க உளவுத்துறை!!
புதன், 28 ஜூன் 2017 (15:28 IST)
ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுகிரகவாசிகள் அறிவியல் படங்களுக்காக உருவாக்கப்பட்டதாக இருந்தாலும் அதன் பின்னணியில் சில உண்மைகள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.
ஏலியன்ஸ் குறித்த ஆதாங்களை ஒரு அறிக்கையின் வடிவில் அமெரிக்க உளவுத்துறை சமர்பித்து உள்ளது. அவற்றில் கவனிக்க வேண்டிய சில முக்கிய புள்ளிகள் பின்வருமாரு...
# நமது பூமிக்கு எண்ணற்ற வேற்று கிரக உயிரினங்கள் வந்து செல்கிறன. மற்ற கிரகங்களில் இருந்து மட்டுமல்லாமல், சில பரிணாம வளர்ச்சியுடனும் இவையுள்ளன.
# பறக்கும் தட்டுக்கள் மூலம் அவை குழுவாக வருகிறது. சில தொலை கட்டுபாட்டின் (remote control) கீழ் உள்ளது.
# ஏலியன்களின் குறிக்கோள் அமைதியானதாக உள்ளது. அவை மனிதர்களைப் போல் இருந்தாலும், மிகப்பெரிய வடிவில் உள்ளனர்.
# பூமி மற்றும் மனிதர்களை தாக்கவில்லை. ஆனால் அவர்களது சொந்த உலகம் எது எம்பது தெரியவில்லை.
# பறக்கும் தட்டுகள் கதிரியக்க ஆற்றல் அல்லது ஒருவகை கதிர் வீச்சை பெற்றிருக்கின்றன.
# ரேடார் மூலமாக அவர்கள் இயந்திரத்தை அடைய முடியவில்லை. பறக்கும் தட்டுகள் ஓவல் வடிவில் உள்ளது.
# பறக்கும் தட்டுகளின் முன் பகுதி கூண்டு கட்டுப்பாடுகள், நடுவில் பரிசோதனைகூடம், பின்புறம் போர் தளவாடங்கள் கொண்டு உள்ளது.