20 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் அமைச்சரவையில் இடம்பெற்ற இந்து
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (14:01 IST)
பாகிஸ்தான் அமைச்சரவையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பனாமா பேப்பர்ஸ் ஊழலில் சிக்கியதை அடுத்து அவரது பிரதமர் பதவி பறிபோனது. இதையடுத்து ஷாகித் ககான் அப்பாஸி பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் அப்பாஸி தலைமையில் 47 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் இந்து மதத்தை சேர்ந்த தர்ஷன் லால்(65) என்பவர் அமைச்சராக இடம்பெற்றுள்ளார். இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். 20 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அமைச்சரவையில் ஒரு இந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
தர்ஷன் லால் சிறுபான்மையினருக்கான ஒதுக்கீட்டின் கீழ் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.