கர்ப்பிணி மனைவியை மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்ற கொடூர கணவர்!

ஞாயிறு, 15 ஜனவரி 2023 (17:40 IST)
உத்தரபிரதேசத்தில் கர்ப்பிணி மனைவியை அவரது கணவர் மோட்டார் சைக்கிளில் கட்டி 200 மீட்டருக்கு மேல் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச  மாநிலம் பிலிபிட்டில்  உள்ள குஞ்சாய் கிராமத்தில் வசித்து வருபவர் ராம்கோபால்.

இவரது மனைவி சுமன். இந்த தம்பதிக்கு 4 ஆண்டுகளுக்கு முன் காதல் ஏற்பட்டு, ஒரு குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர்.

சுமனின் பெற்றோற் இறந்துவிட்டனர். சமீபத்தில் குடிக்கு அடிமையான  ராம்கோபால், அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு, அவரை தாக்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மதியம் ராம்கோபால், மது அருந்திவிட்டு வந்து மனைவியைத் தாக்கி, மோட்டார் சைக்கிளில் கட்டி 200 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் ராம்கோபாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்