பின்னர், 5 நிமிடங்களுக்குப் பின்னர், அக்குழந்தையை நீச்சம் குளத்தில் இருந்து மீட்டனர்.
குழந்தையின் வாய்க்குள் நீர் சென்று மயக்கம் அடைந்ததால், ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டும் பலன் இல்லாததால், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள், குழந்தையைப் பரிசோதித்து, சிபிஆர் சிகிச்சையை செய்யத் தொடங்கினர். சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு கொண்டு வரக்கூடிய இச்சிகிச்சையில் மூலம் 3 மணி நேரத்திற்குப் பின் குழந்தையின் இதயத்துடிப்பு மீண்டும் துடித்தது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, குழந்தையை மீட்ட மருத்துவர்களுக்கு பெற்றோரும், மக்களும் பாராட்டுகள் கூறி வருகின்றனர்.