இறந்த தாயின் உடலோடு 2 நாட்கள் இருந்த 3 வயது சிறுவன்

வெள்ளி, 3 மார்ச் 2017 (16:26 IST)
ஸ்காட்லாந்து நாட்டில் உயிரிழந்த தாயின் உடலோடு 3 வயது சிறுவன் தனியாக இரண்டு நாட்கள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஸ்காட்லாந்து நாட்டில் லிடியா மெக்டொனால்டு தனது 3 வயது மகனுடன் வசிந்து வந்தார். மகன் 8 மாத குழந்தையாக இருக்கும்போது லிடியா கணவர் உயிரிழந்து விட்டார். லிடியா தனது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
 
லிடியாக வெகு நாட்களாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். திடீரென ஒரு நாள் லிடியா கடுமையாக பாதிக்கப்பட்டு மூச்சு விட முடியாமல் திணறி வீட்டிலேயே இறந்துவிட்டார். லிடியாவின் மகன் செய்வதறியாது தாயின் அருகில் இருந்தப்படி அழுந்துள்ளான்.
 
பின்னர் லிடியாவின் தாய் வீட்டுக்கு வந்தபோது லிடியா இறந்து கிடப்பதை அறிந்து பின் சடலத்தை மீட்டு குழந்தையை காப்பாறியுள்ளார். சிறுவன் இரண்டு நாட்களாக பிரிட்ஜில் இருந்த உணவுகளை சாப்பிட்டு வந்தது தெரியவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்