மீண்டும் இணையும் விக்ரம் பிரபு & டாணாக்காரன் இயக்குனர் தமிழ் கூட்டணி…!

புதன், 22 ஜனவரி 2025 (12:43 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித். அவர் தன்னுடைய நிறுவனம் சார்பில், அசுரவதம், குரு, சர்பத், துக்ளக் தர்பார், மகான், காத்துவாக்குல் ரெண்டு காதல், மாஸ்டர் மற்றும் லியோ உள்ளிட்ட பல்வேறு  படங்களை தயாரித்துள்ளார்.

விஜய்க்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கும் லலித், அடுத்து தன்னுடைய மகன் அக்‌ஷய் குமாரைக் கதாநாயகனாக ஆக்கவுள்ளார். இந்த படத்துக்கான கதையை   ‘டாணாக்காரன்’ இயக்குனர் தமிழ் எழுத வெற்றிமாறனின் இணை இயக்குனராக சுரேஷ் என்பவர் இயக்கவுள்ளாராம்.

இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விக்ரம் பிரபு இயக்குனர் தமிழ் இயக்கத்தில் டாணாக்காரன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த படம் அவருக்கு ஹிட் படமாக அமைந்தது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்