சுவையான கறிவேப்பிலை சாதம் செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
அரிசி - 1 கப்
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 6 பல்லு
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
லவங்கம் - சிறிது
பட்டை - சிறிது
எண்ணெய் - சிறிதளவு
 
அரைக்க தேவையான பொருட்கள்:
 
பூண்டு - 5 பல்லு (எண்ணெயில் வதக்கவும்)
கறிவேப்பிலை - 1/4 கப்
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் - 5 (தேவைகேற்ப)
புளி - சிறு எலுமிச்சை அளவு
பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை: 
 
1 கப் அரிசியில் சாதத்தை உதிரியாக வடித்து அகலத்தட்டில் வைத்து சிறிது நெய் விட்டுப் பிரித்து விடவும். சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 
வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி பட்டை, இலவங்கம் போட்டு தாளிக்கவும். பின் பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்றாக விழுதாகும் வரை வதக்கவும்.
 
அதனுடன் அரைத்த மசால விழுதையும் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். இந்த கலவையில் தேவைக்கேற்ற உப்பையும், சாதத்தையும் சேர்த்து நன்றாக  கலக்கி விடவும். அலங்கரிக்க வறுத்த முந்திரிப்பருப்பை தூவவும். சூடான சுவையான கறிவேப்பிலை சாதம் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்