ஆரோக்கியம் தரும் எள்ளு துவையல் செய்ய.....!!

தேவையான பொருட்கள்:
 
எள் - 100 கிராம்
மிளகாய் வத்தல் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - 4 பல்
தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் எள்ளைப் போட்டு மிதமான சூட்டில் நன்கு வறுத்து எடுத்து ஆறவிடவும்.
 
நன்கு ஆறியதும் அரைக்க கொடுத்துள்ள மிளகாய் வத்தல், புளி, பூண்டு, தேங்காய் துருவல், கறிவேப்பிலை, உப்பு பொருள்களோடு சேர்த்து  மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி விட்டு, பின் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். சுவையான எள்ளுத் துவையல்  தயார். இவை சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்