எளிதான முறையில் வாழைத்தண்டு சூப் செய்ய.....

தேவையானப் பொருள்:
 
வாழைத்தண்டு - 1 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1
மிளகாய் வற்றல் - 2
மஞ்சள் தூள் - சிறிதளவு
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 5
சின்ன வெங்காயம் - 5
இஞ்சி - 1 துண்டு
பூண்டு பல் - 2
கொத்தமல்ல, கறிவேப்பலை - தேவையான அளவு
தனியா - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி

 
செய்முறை:
 
வாழைத்தண்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி 6 கப் நீர் விட்டு சிறுதீயில் கொதிக்க விடவும் தனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும்.
 
வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
 
வாழைத்தண்டு பாதி வெந்திருக்கும் போது வதக்கிய கலவையையும், பொடி செய்த தூள், மஞ்சள், உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது தூவி இறக்கவும்.

சுவையான வாழைத்தண்டு சூப் தயார். உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகு அளவை கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். இல்லை எனில் மிளகு தூள் சூப் சாப்பிடும்போது கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்