செய்முறை:
முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும். பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும். மூன்றையும் மையாக அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். 1 டம்ளர் தண்ணீர் விடவும். புளி கரைத்த தண்ணீர் சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடி எல்லாம் சேர்க்கவும். நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.