செய்முறை:
முடகத்தான் கீரையை நீரில் அலசி சுத்தம் செய்யவும். அதன் காம்புடன் சேர்த்து நறுக்கி கொள்ளவும். நறுக்கிய முடகத்தான் கீரையை தண்ணீர் ஊற்றி, சீரகம், மிளகு, வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வேக வைக்க வேண்டும்.
குறிப்பு:
இதன் பயன்கள் என்னவென்றால், நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பதுதான். மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகளுக்கு காரணம் மூட்டுகளில் தங்கும் யூரிக் அமிலம், புரதம், கொழுப்பு திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள் தான். இவைகளை கரைத்து வெளியேற்றும் சக்தி முடகத்தான் கீரைக்கு உண்டு.