எள், உளுந்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியே வறுத்து கொள்ளவும். புளி, பூண்டுப்பற்கள், பெருங்காயத்தூள் மூன்றையும் லேசாக வறுத்துக்கொள்ளவும். இறுதியில் கறிவேப்பிலையை லேசாக வறுத்து எல்லாவற்றையும் சிறிது நேரம் ஆறவிடவும்.
நன்கு ஆறியவுடன் எல்லாவற்றையும் போட்டு அதனுடன் உப்பும் சேர்த்து பொடித்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். சுவையான எள்ளுப்பொடி தயார். இவை இட்லி தோசையுடனும், சுட சாதத்துடன் நெய் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.