வாஸ்து சாஸ்திரம் என்பது ஒவ்வொரு மனித வாழ்வின் வெற்றிக்கும் அடித்தளமாக விளங்கக் கூடிய ஒன்றாகும். வாஸ்து விதிகளின் படி ஒரு வீடோ அல்லது தொழிற்சாலையோ அமைக்கப்படும் போது, அங்கு இருக்ககூடிய அனைவருக்கும் எப்பொழுதும் நல்ல ஆற்றலே இருக்கும். என்றும் மன அமைதி , உடல் நலம், செல்வ செழிப்போடு காணப்படுவர்.
வாஸ்து என்றால் நான்கு திசை மற்றும் நான்கு மூலைகள் கொண்டே கருதப்படுகின்றன. அவை, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு. மேலும் நான்கு மூலைகள் வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு ஆகும். இவற்றை கொண்டு வாஸ்துவில் அடிப்படையாக கருதப்படும் ஆறு மிக முக்கியமான பொதுவான விதிகள் ஆகும்.
வடக்கு மற்றும் கிழக்கில் அதிக காலி இடம் இருத்தல் அவசியம்.
தலைவாசல் என்றுமே உச்சத்தில் தான் அமைக்கப்பட வேண்டும்.