வாஸ்து: வீட்டின் வாசல் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்....?

ஒரு வீட்டிற்கு முன்புற வாயில் பின்புற வாயில் என இரண்டு இருக்கலாம். வந்து செல்வதற்கு இரண்டு வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது. 

ஒரு சிலர் மூன்று வாசல் வீடு அமைப்பார்கள்.இதில் ஒவ்வொரு வாசலும் எந்த திசையில் உள்ளது என அறிய வேண்டும். முடிந்த வரை கிழக்கு,மேற்கு,வடக்கு  திசையில் வாசல் அமைப்பது நலம்.
 
தென்கிழக்கு, தென்மேற்கில் வாசல அமைக்கக்கூடாது. ஒரு சில வீடுகளில்தெற்கில் வாசல் அமையும். அதனால் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது.. தலைவாசலே  ஒருவீட்டின் மதிப்பை நிர்ணயிக்கிறது. ஒரு வீட்டில் இரண்டு தலைவாசல்கள் வைக்க விரும்புவர்கள் கிழக்கு மற்றும் தெற்க்கில் அமைப்பது சிறந்த பலன் தரும்.
 
ஒரு வீட்டின் கதவுகளின் எண்ணிக்கையை பொருத்தும், அந்த வீட்டின் பலன்கள் அமைகிறது என வாஸ்து சாஸ்த்திரம் விவரிக்கிறது.
 
இரண்டு கதவுகள்: நல்ல பலன்கள் கிட்டும்.
மூன்று கதவுகள்: எதிரிகள் அதிகமாவார்கள்.
நான்கு கதவுகள்: நீண்ட ஆயுள் கிட்டும்.
ஐந்து கதவுகள்: அவ்வபோது நோய்களால் வேண்டிவரும்.
ஆறு கதவுகள்: புத்திர பாக்கியம் உண்டு.
ஏழு கதவுகள்: ஆபத்துக்கள் நேரிடலாம்.
எட்டு கதவுகள்: செல்வம் குவியும்.
ஒன்பது கதவுகள்: நோய்கள் வரும் ஆபத்து உண்டு.
பத்து கதவுகள்: பணமும் பொருளும் வீடு தேடி கவரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்