தங்கம், வெள்ளி இறக்குமதி 71.4 சதவீதம் சரிந்தது

புதன், 12 மார்ச் 2014 (19:02 IST)
தங்கம், வெள்ளி இறக்குமதி 71.4 சதவீதம் சரிந்து ரூ.9,943 கோடியாக குறைந்தது.
FILE

நடப்பு கணக்கு பற்றாக்குறையை ஈடுசெய்யவும், பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதனால், தங்கம், வெள்ளி இறக்குமதி செய்வது குறைந்து வந்தது.

கடந்த 2013 பிப்ரவரி மாதம் தங்கம், வெள்ளி இறக்குமதி ரூ.31,964 கோடியாக இருந்தது. கடந்த ஜனவரியில் இது ரூ.10,492 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை தங்கம், வெள்ளி இறக்குமதி முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 41.47 சதவீதம் குறைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், வர்த்தக பற்றாக்குறையும் குறைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்