பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கலாமா? முன்னாள் நீதிபதி கேள்வி

சனி, 7 ஜூலை 2018 (08:05 IST)
கிரிக்கெட் உள்பட விளையாட்டு போட்டிகளில் நடைபெறும் சட்டவிரோத சூதாட்டத்தால் ஏராளமான ஹவாலா பணம் புழங்குவதால் அதனை கட்டுக்குள் கொண்டு வர சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கலாம் என்ற பரிந்துரையை சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு செய்துள்ளது. ஆனால் இந்த பரிந்துரைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சூதாட்டம் சட்டபூர்வமாக்கினால் விளையாட்டு போட்டிகளின் மகிமையே குறைந்துவிடும் என்றும் சூதாட்டக்காரர்கள் தான் போட்டியின் முடிவை நிர்ணயிப்பார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சூதாட்டம் குறித்து சட்ட ஆணையத்தின் இந்த பரிந்துரை குறித்து  சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியபோது, 'இன்றைய சூழ்நிலையில் விளையாட்டு என்பது சூதாட்டமாகிவிட்டது. இருப்பினும் சட்டவிரோத சூதாட்டம் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதை சட்டபூர்வமாக்கும்போது, 75 சதவீத சட்டவிரோத சூதாட்டங்கள் நின்று விடும். அதே நேரம் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கலாமா? என்று கேட்டால், 'ஆம்' என்றே நான் சொல்வேன். பாலியல் தொழிலையும் சட்டபூர்வமாக்கி, அந்த தொழிலில் உள்ளவர்களுக்கு லைசென்ஸ் கொடுத்தால், அந்த தொழிலும் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று அவர் கூறினார்
 
ஆனால் பாலியல் தொழிலை சட்டமாக்கினால் பெண்களின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய நிலை வரும் என்பதால் மத்திய அரசு இதற்கு சம்மதிக்காது என்றே மத்திய அரசின் வட்டாரங்கள் கூறுகின்றன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்