சட்டவிரோதமாக தங்கிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டார்களா? அமெரிக்க அதிகாரி தகவலால் பரபரப்ப்பு..!

Siva

செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (09:27 IST)
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கிய இந்தியர்கள், நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து, அமெரிக்காவில்  சட்ட விரோதமாக தங்கி இருக்கும் இந்தியர்கள் உள்பட அனைத்து நாடுகளின் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 18,000 பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருப்பதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில், அமெரிக்க அதிகாரி ஒருவர் இது குறித்து கூறிய போது, சட்டவிரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள், C-17 என்ற விமான மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
 
டெக்ஸாஸ், கலிபோர்னியா உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 5,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதாக பென்டகன் உறுதி செய்துள்ளது.  விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
அமெரிக்கா வரலாற்றில் முதல்முறையாக, சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டு மக்களை கண்டுபிடித்து, ராணுவ விமானங்கள் மூலம் அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள், என அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்