இந்த நிலையில், தேர்தல் முடிந்தவுடன் நடந்த கருத்துக்கணிப்பில், பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
டெல்லி மக்கள், ஆம் ஆத்மி கட்சிக்குதான் ஆட்சி அமைக்க ஆணை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், எனவே ஆம் ஆத்மி அரசு மீண்டும் அமையும் என்றும் அவர் கூறினார். மேலும், கட்சி வேட்பாளர்களின் அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வைத்து, பாஜக ஒரு உளவியல் கதையை உருவாக்கி வருவதாகவும், வேட்பாளர்களை பணம் கொடுத்து தான் வசம் எடுக்க முயற்சி செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே, கட்சி மாறினால் 15 கோடி அளிப்பதாக பேரம் பேசியுள்ளதாகவும், பாஜக மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை விசாரணை செய்ய, டெல்லி தலைமைச் செயலாளருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.