பாரதிராஜா படத்தின் பாடல் உரிமையை கைப்பற்றிய யுவன்

செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (11:34 IST)
ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில் உருவாகும் படம் குரங்கு பொம்மை.  பாரதிராஜா, விதார்த் நடிக்கும் இந்த படத்தை நித்திலன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி வெளியிட்டார். மேலும் அனிமேஷன் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.


 

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டர் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து, இப்படத்தின் இசை உரிமையை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது யு 1 ரெக்கார்ட்ஸ் மூலம் பெற்றுள்ளார்.

யுவன் இசை உரிமையை பெற்றது ‘குரங்கு பொம்மை’ படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் இசை விரைவில் வெளியாகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்