இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கிய யாத்திசை படத்தின் ட்ரெய்லர் பா.ரஞ்சித், மோகன் ஜி, அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பல பிரபலங்களால் வெளியிடப்பட்டதால் கவனம் ஈர்த்தது. யாத்திசை படம் ‘பொன்னியின் செல்வன் 2’ க்கு முன்னதாக ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சோழர்களின் வரலாற்றை சொல்லும் பொன்னியின் செல்வனும், பாண்டியர்களின் வரலாற்றை சொல்லும் யாத்திசையும் மோதிக்கொண்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தை இது பீட் செய்யுமா என எதிர்பார்க்கப்படுகிறது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான கதையாக்கம் மற்றும் மேக்கிங்கில் சிறப்பாக இருந்ததால் கணிசமான ரசிகர்களைக் கவர்ந்தது.