எம்ஜிஆர் - சிவாஜி விருது பெற்ற யாஷிகா - கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

திங்கள், 20 ஜனவரி 2020 (13:19 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். 
 
அந்த வகையில் கடைசியாக இவர் யோகி பாபுவுடன் சேர்ந்து "ஜாம்பி" படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாக பெரிதாக வரவேற்பு பெறாமல் தோல்வியை தழுவியது. அப்படியிருக்க தற்போது இந்த படத்தில் நடித்ததற்காக யாஷிக்காவிற்கு எம்ஜிஆர் - சிவாஜி விருது கொடுத்து கௌரவித்துள்ளனர். அந்த விருதுடன் யாஷிகா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் , இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து கொடுத்ததற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். 
 
இதனை கண்ட நெட்டிசன்ஸ்..ஏன்டா! இது உங்களுக்கே அநியாமா தெரியலையா..? எந்த விருதை யாருக்கு கொடுக்கவேண்டும் என்ற வெவஸ்தை கூடவா இல்லை. இந்த விருதுக்கான மரியாதையே போய்டுச்சு என்று கூறி கலாய்த்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்