இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து இணையவாசிகளை திருப்திப்படுத்த தன்னுடைய கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது நீச்சல் உடை போல வடிவமைக்கப்பட்டுள்ள உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.