'ராமாயணம்' படத்தில் நடிக்கும் யாஷுக்கு ரூ.150 கோடி சம்பளம்!

புதன், 25 அக்டோபர் 2023 (17:56 IST)
3 பாகங்களாக உருவாகும் ராமாயணம் திரைப்படத்தில்    நடிகர்  யாஷ் சம்பளம் ரூ.150 கோடி  நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி தற்போது ராமாயணம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூர், ராவணனாக யாஷ், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தை பிரபல இந்தி இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கவுள்ள நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் இந்த படம் உருவாகவுள்ளது.

மூன்று பாகங்களாக இந்தப் படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.

முதல் கட்ட படப்பிடிப்பில் யாஷ் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும், இந்த படத்தில் சீதையாக சாய்பல்லவி நடிக்கவுள்ளார். இதை சமீபத்தில் சாய்பல்லவி உறுதி செய்தார்.

இந்த நிலையில் இப்படத்தில் ராவணனாக நடிக்கும் யாஷ் சம்பளம் ரூ.150 கோடி  நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

வில்லனாக நடிப்பதற்கு நடிகர் யாஷிற்கு இத்தனை கோடி சம்பளம் கொடுக்கப்படுவது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, கேஜிஎஃப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் வெற்றியால்தால் இந்த சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்