எனது குறும்படத்தைக் காப்பி அடித்து கார்த்திக் சுப்பராஜ் படம் எடுத்துள்ளார் – எழுத்தாளர் புகார்!

சனி, 17 அக்டோபர் 2020 (15:48 IST)
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள மிராக்கிள் என்ற குறும்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள புத்தம் புது காலை ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றுள்ளது.

அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ள புத்தம் புது காலை திரைப்படத்தில் ஒரு குறும்படமாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி பாபி சிம்ஹா நடித்துள்ள மிராக்கிள் என்ற குறும்படமும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான அஜயன் பாலா முகநூலில் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இது சம்மந்தமான அவரின் முகநூல் பதிவு:-

நேற்று நண்பர் இலங்கைவேந்தன் போன் செய்து உடனே அமோசானில் புத்தம் புதுக்காலை படம் பாருங்க என பதட்டத்துடன் சொன்னார் . என்ன என கேட்டபோது அவர் சொன்ன தகவல் ஷாக்காக இருந்தது . அதில் கடைசியாக் வரும் மிராக்கிள் படம் அப்படியே நான் நடிக நிலம் நடிப்பு பயிற்சி மாணவர்களுக்காக கடந்த வருட இறுதியில் உருவாக்கி கொரானா வால் போஸ்ட் ப்ரொட்க்‌ஷன் தாமதமாகி கடந்த மாதம் யூ ட்யூபில் வெளியானது என் சச்சின் கிரிக்கட் கிளப் குறும்படம் . இதன் கதையை அப்படியே சுட்டுவிட்டார்கள் என்றார் அவர். நானும் இரவே பார்த்தேன் . என் கதையில் பத்து பேர் அவர்கள் கதையில் இரண்டு பேர் கதைக்களம் பகல் அதில் இரவு . மத்தபடி பேராசை பெருநட்டம் எனும் என் கதைக்கருவும் பணத்தேவைக்க தவறு செய்யப்போய் இருக்கும் பணத்தை கோட்டை விடுவதுமான கதை அமைப்பும் இறுதியில் டம்மி பணம் எனும் கதையின் முக்கிய திருப்பம் க்ளைமாக்சாக அமைந்திருப்பதும் அப்படியே இருக்கிறது .


 
படத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹா என் நட்பு வட்டத்தில் இருப்பவர் . பன்னிரண்டு வருடமாய் நன்கு பழகியவர் . இதை சட்ட பூர்வமாய் எதிர்கொள்ள வழி இருக்கிறதா தெரியவில்லை . ஒரு ஷார்ட் பிலிமின் முக்கிய தகுதியே தனித்த ஐடியா தான். இருபது வருடமாய் போராடி படம் இயக்க முடியவில்லை சரி ஒரு ஷார்ட்பிலிமாவது எடுக்கலாம் என்று பார்த்தால் அதையும் உல்டா அடித்து ஓடிடிக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் அளவுக்கு தமிழில் கதை பஞ்சமா ? எத்தனை சிறுகதைகள் கொட்டிகிடக்கிறது எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் . இவர்களுக்கு ஏன் ஒரு எழுத்தாளனின் கதையை் பயன் படுத்தும் எண்ணம் வருவதில்லை சினிமாவுக்கு ஆரோக்கியமானதல்ல. சரி சுட்டார்களே ஒழுங்காகவாவது திரைக்கதை அமைத்தார்களா அதுவும் இல்லை .. ஒரு டயரை திருடப்போகும் வீட்டிலும் சுமந்து செல்லும் லாஜிக் இல்லாத மொக்கை காட்சியெல்லாம் ஒரிஜினலாக சிந்திக்கும் படத்தில் வரவே வராது
கீழே லிங்கில் என்னுடைய குறும்படத்தின் லிங்க்
https://youtu.be/jBisF5iSxnM

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்