லாரன்ஸ் இதுவரை செய்யாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிபிசிஐடி அதிகாரியாக வருகிறார். அவரது நடிப்பு வித்தியாசமாக இருக்கும். சிவலிங்கா படம் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெளியாகிறது. இப்படத்தை உலகம் முழுவதும் திரையிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப ‘சப்-டைட்டில்' கொடுக்க உள்ளோம். ஜனவரி 26-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். லாரன்சின் தாயாராக ஊர்வசி, கதாநாயகியின் தாயாராக பானுப்பிரியா நடித்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.