இப்படத்தில் பணியாற்றியது குறித்து, நஸ்ரியா கூறியுள்ளதாவது: தமிழர் ரசிகர்களுக்கு காதல் கதை என்றால் மிகவும் ஆதரவு அளிப்பர், அடடே சுந்தராவுக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நான் மீண்டும் நடிக்க வேண்டுமென என் கணவர் ஃபகத் பாசில் கூறியதாலும், இப்படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தாலும் நடிக்க ஒப்புக்கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.