காக்கிச்சட்டை அணிந்த கவர்ச்சி நடிகை

சனி, 9 செப்டம்பர் 2017 (14:40 IST)
கவர்ச்சி நடிகையான சோனா, ஒரு படத்தில் போலீஸாக நடிக்கிறார்.

 
 
கோடம்பாக்கத்தின் கவர்ச்சி நடிகையான சோனா, மலையாளத்தில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். அத்துடன், தமிழ் –  தெலுங்கில் உருவாகும் ஒரு படத்தில், போலீஸாக நடிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்துக்காக, டயட் மற்றும் எக்சர்சைஸ் மூலம் உடல் எடையைக் குறைத்து வருகிறார்.
 
அறிமுக இயக்குநரான தேவ் இயக்கும் இந்தப் படம், க்ரைம் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கும் ஷூட்டிங்கிற்காக, இப்போதே சண்டையும் கற்று வருகிறது. இந்தப் படத்தில், புகை பிடிப்பவராக நடித்துள்ளாராம்  சோனா. ‘படத்தைப் பார்த்தால் அதற்கான காரணம் புரியும்’ என்கிறார் சோனா.

வெப்துனியாவைப் படிக்கவும்