வெந்து தணிந்தது காடு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட நடிகை சிந்து இத்னானி!

சனி, 6 ஆகஸ்ட் 2022 (09:30 IST)
சிந்து இத்னானி தமிழில் அறிமுகம் படமாக வெந்து தணிந்தது காடு படம் உருவாகியுள்ளது.

மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடந்துவரும் நிலையில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை சமீபத்தில் பேசி முடித்தார் சிம்பு. இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் இப்போது கதாநாயகி சிந்து இத்னானி தன் காட்சிகளுக்கான டப்பிங்கை நிறைவு செய்துள்ளதாக சமூகவலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்