நடிகர் கமலுடன் இணையும் சிம்பு...ரசிகர்கள் மகிழ்ச்சி

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (15:24 IST)
தமிழ்  சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு, கமலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் கமல்ஹாசன். சமீபத்தில் இவர் நடிப்பில், இயக்குனர் லோகேஷ்  கனகராஜ்     இயக்கத்தில் வெளியான படம் விக்ரம். இப்படம் ரூ.500 கோடி வசூல் குவித்துள்ளது.

இந்த நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் இளம் நடிகர்களை வைத்து படம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். எனவே,  நடிகர் சிவகார்த்திகேயன்  நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள 51 வது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படத்தை மகேஷ் நாராணன் இயக்குகிறார்.

இதையடுத்து, கமல், சிம்புவை வைத்து 53 வது படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதன்பின், உதய நிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை ராஜ்கமல்  பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமாவில் பிரபல இயக்குனர் ஜிஎஸ். பணிக்கர் இன்று காலமானார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்