ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார். மேலும் சமீபத்தில் வெளிவந்த ஆடை படத்தில் அமலா பாலின் நெருங்கிய தோழியாக நடித்து லிப்லாக் சர்ச்சை காட்சியில் சிக்கினார்.
சமீபநாட்களகாக சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நீச்சல் குளத்தில் கூட ஃபுல் மேக்கப்புடன் தான் இருப்பீர்களா என பங்கமாக கிண்டலடித்து கலாய்த்து வருகின்றனர்.