ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய அவர் அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார். சமீபத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான ஆடை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.