இந்நிலையில், செர்பியாவுக்கு மறுபடியும் ஷூட்டிங் போயிருக்கிறார்கள். அங்கு ஷூட்டிங் நடந்தபோது விவேக் ஓபராய்க்கு அடிபட்டதால், சில காட்சிகளை எடுக்க முடியவில்லையாம். அதை எடுப்பதற்காக மறுபடியும் செர்பியா சென்றிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. அஜித் – விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட இந்தக் காட்சிகள், ஒரு வாரத்தில் படம்பிடிக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்துள்ளனர்.
காஜல் அகர்வால் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், அக்ஷரா ஹாசன் மற்றும் விவேக் ஓபராய் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார். ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் ரிலீஸாகும் எனத் தெரிகிறது.