விஸ்வாசம்: படம் வந்தே 26 நாள் தான் ஆகுது, அதுக்குள்ள 50-வது நாள் கொண்டாட்டம்..!
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (18:09 IST)
அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான விஸ்வாசம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி இன்றுடன் 26 வது நாளை நிறைவு செய்கிறது.
தல ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்திரைப்படம் வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்று 200 கோடி வரை வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. மகளின் பாச பிணைப்பை மையக்கருவாக கொண்ட இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் படமும் வெளிவந்து இன்றுடன் 26 நாள் ஆன நிலையில் இந்த படத்தின் 50 வது நாள் குறித்து பிரபல ரோகினி நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
அதாவது, இந்த படம் வரும் 28 ஆம் தேதியோடு வெற்றிகரமாக 50வது நாளை எட்ட உள்ளது ஆதலால் 50 வது நாளில் ரோகினி திரையரங்கத்தில் உள்ள 6 திரையிலும் விஸ்வாசம் திரைப்படத்தை திரையிட உள்ளனர்.
விஸ்வாசம் படத்தின் 50 வது நாளுக்கான டிக்கட் விற்பனை இப்போதே சூடு பிடித்துவிட்டதாம்.