அப்பாவை தப்பாமல் அதே சாயலில்... விஷ்ணு விஷால் மகன் இம்புட்டு வளர்ந்திட்டாரே!

செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (13:25 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமண செய்துக்கொண்டார்.
இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். இப்படியான நிலையில் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து மறுமணம் செய்துக்கொண்டார். மறுமணம் செய்தாலும் தன மகன் மீது இருக்கும் பாசம் விஷ்ணு விஷாலுக்கு கொஞ்சமும் குறையவில்லை. 
அவ்வப்போது மகனை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார் . இந்நிலையில் தற்போது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட அதில் அவர் மகனின் வளர்ச்சியை கண்டு ரசிகர்கள் வியந்துவிட்டனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்