இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு பரஸ்பர மனதுடன் விவாகரத்து செய்துகொண்டனர்.
இதையடுத்து கேரியரில் அதீத கவனத்துடன் இருந்த வந்த விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலிக்க துவங்கினார். அவ்வப்போது இருவரும் சேர்ந்து இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை சாமுவலைத்தளங்களில் வெளியிட்டு வருவார். அந்தவகையில் சமீபத்தில் கூட ஜுவாலா கட்டா கொரோனா ஊரடங்கு உத்தரவின் சமூக விலகளால் தனது காதலர் விஷ்ணு விஷாலை பிரிந்திருப்பதாக வருத்தமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் 2020 ஆரம்பிக்கும்போதே நான் எப்படியிருந்தேன் இப்போ எப்படி ஆகிவிட்டேன் என கூறி FIR படத்தின் கட்டான உடலை பதிவிட்டுள்ளார்.